GKR BROTHERS COMPUTER TIPS: காசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்!!
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.

Saturday, 5 October 2013

காசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்!!


கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரதான கிளை பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் தனது உறவினர் பையனுக்கு பணம் போடுவதற்காக வங்கிக்கு சென்றிருந்தேன் பணம் கட்டும் செல்லானை எடுக்க முயன்றபோது அருகில் செக்யூரிட்டி ஏம்பா தம்பி வங்கியில் எவ்வளவு பணம் செலுத்த போகிறாய் என்று கேட்டார் நானும் 3500 ரூபாய் என்று சொன்னேன். அதற்கு உடனே இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்கா என்று கேட்டார்
நானும் இல்லை என்று சொன்னேன் உடனே அவர் அப்போ நீங்க இங்க பணம் போடமுடியாது என்று கூறினார். உடனே ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் இந்த வங்கியில் பணம் போட வேண்டுமென்றால் இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்க வேண்டும் இல்லை என்றால்10000 ரூபாய்க்கு மேல் தான் பணம் போட முடியும் என்றார். குறைவாக இருந்தால் எங்கு சென்று போட வேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர் வெளியில் பாரத ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கிறது அங்கு சென்றுதான் போட வேண்டும் என்று சொன்னார் நான் கூட வேலை சுலபமாக முடியதான் இப்படி ஆரம்பித்துள்ளார்கள் என்று நம்பி அங்கு சென்றேன்.அப்போது அங்கு நடந்த கொடுமையான செயலை பற்றித் தான் இன்றைய பதிவு.

வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு உள்ளே சென்று அங்கு இருந்த ஒரு பெண் அலுவலரிடம் பணம் போட வேண்டும் என்று சொன்னேன் அதற்கு எவ்வளவு அமௌன்ட் என்று கேட்டார்கள் 3500 ருபாய் என்று சொன்னேன். உடனே அவர்கள் 70 ருபாய் எக்ஸ்ட்ரா செலுத்த வேண்டும் என்றார்கள் 70ருபாய்யாயா எதற்கு என்று கேட்டபோது Transfer charges என்று கூறினார்கள். நான் உடனே வங்கியில் அப்படி ஒன்றும் கேட்பதில்லையே என்று சொன்னேன். அதற்கு இனிமேல் 10000-க்கும் குறைவாக இருந்தால் இது போன்ற வாடிக்கையாளர் சேவை மையத்தில் தான் நீங்கள் பணம் செலுத்த முடியும் என்று கூறினார்கள். உடனே எப்படி 70 ருபாய் கேட்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அங்கு ஒட்டியிருக்கும் பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
ஒன்றும் புரியலையே என்று சொன்னேன் அதற்கு பாரத ஸ்டேட் பாங்க் என்றால் நீங்கள் கட்டும் அமௌன்ட்-ல் 2% என்று கூறினார்கள். உடனே அந்த அலுவலர் நீங்கள் மற்ற வங்கிக்கு கூட நீங்கள் இங்கயே பணம் செலுத்தலாம் என்று சொன்னார் அதற்கு எவ்வளவு என்று கேட்டேன் மற்ற வங்கிகளுக்கு எல்லாம்1% தான் என்று சொன்னார்கள். எதற்கு ஸ்டேட் பாங்க்கிற்கு மட்டும் 2% என்று கேட்டேன் அதற்கு இது ஸ்டேட் பாங்க் பிக்ஸ் செய்து விட்டது என்று சொன்னார்கள். இதில் எந்தெந்த வங்கிக்கு எல்லாம் பணம் செலுத்த முடியும் என்று கேட்தற்கு உங்கள் pay slip-ல் பின்னாடி இருக்கும் என்றார்கள். இதில்HDFC, Indian Overseas Bank என்ற இரண்டு வங்கியும் சேராதாம்.
கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொன்றிருந்தேன் பிறகு அந்த அலுவலரிடம் சென்று நீங்கள் எப்படி இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டதிற்கு OXIGEN என்ற எங்கள் நிறுவனம் பாரத ஸ்டேட் பாங்க் வங்கியிடம் Tie up வைத்து இருக்கிறோம் என்றார்கள். நீங்கள் மட்டும் தானா இல்லை வேறு யாரேனும் இப்படி வைத்துள்ளார்களா என்றேன் BLAZE மற்றும் ZERO MICRO - FINANCE Saving Support Fountation 
என்ற நிறுவனமும் வைத்துள்ளார்கள் என்றனர். விடுமுறை நாட்களில் கூட நீங்கள் பணம் செலுத்தலாம் என்றார்கள். (ரொம்ப முக்கியம் என்று மனதில் நினைத்துகொண்டேன்) வேறு வழி....ஆதலால் இனிமேல் பாரத ஸ்டேட் பாங்க் வங்கிக்கு 10000 குறைவாக கொண்டு சென்றால் அதற்கு உண்டான Transfer Charges Amount -யையும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே!!
நன்றியுடன்
G.K.RAJAN

No comments:

Page

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks