GKR BROTHERS COMPUTER TIPS
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.

Saturday, 24 May 2014

GKR BROTHERS NEW LOGO GENERATED 2014Monday, 27 January 2014

அந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.

அந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.

மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது இணையத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் எல்லா கோப்புக்கும் பொருந்தும். அதுவும், "இலவச தரவிறக்க வசதி" என்று விளம்பரப்படுத்தும் தளங்களில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
Software எனப்படும் மென்பொருட்கள்தாம் நம் கணினியை இயக்கி வருகின்றன. MS Office ல் இருக்கும் Word, Excel, Power point ஐ தெரியாதவர்கள் இருக்க முடியாது. கணினியே கதி என்று இருப்பவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். Flash, silverlight, photoshop, Visual Basic, Oracle, என்று சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணிக்கையில் அடங்காது. உங்களை இணையத்தில் சஞ்சரிக்கச் செய்வதும் இந்த மென்பொருட்களே. இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் மென்பொருட்களை உருவாக்குவது மனித மூளையே. உயிர் காக்கும் பென்சிலின் ஆகட்டும், தலைமுறைகளை முடமாக்கின அணுகுண்டு ஆகட்டும் இரண்டுக்குமே மூல காரணம் இந்த மூளைதான்.
கணினிதுறையிலும் இந்த வாதம் பொருந்தும். நாம் தினம் உபயோகிக்கும் மென்பொருட்களை தயாரிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, நம்மை தொந்தரவு செய்யவே சிலர் மென்பொருள் தயாரித்து வெளியிடுவார்கள். இந்த மாதிரி (தீய) நோக்கத்துடன் வெளியிடப்படும் மென்பொருட்களைத் தான் Malware என்று சொல்கிறோம்
1. Malware என்றால் என்ன ?

தீங்கு செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்ட மென்பொருள் Malware என அழைக்கப்படும். உங்கள் அனுமதி இல்லாமல், உங்கள் கணினியிலிருந்து தகவல்களைச் சேகரிக்கவோ அழிக்கவோ பிறருக்கு அனுப்பவோ செய்வது இதன் வேலையாகும். தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகளில் பதுங்கி உங்கள் கணினியில் வந்திறங்கும்.

2. Spyware என்றால் என்ன ?

உங்கள் கணினியில் உளவாளியைப் போல் பதுங்கி இருக்கும். உங்களது நடவடிக்கையை கூர்ந்து கவனித்து உங்களுக்கு தெரியாமலேயே தன் எசமானுக்குத் தகவல்களை அனுப்பும். உதா: எம்மாதிரியான தளங்களை நீங்கள் அதிகம் பார்வையிடுகிறீர்கள், அத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் (password), Credit card Number, Bank account Number போன்ற தகவல்களைச் சேகரிக்கும். Spyware இன் ஆதிக்கம் இருக்கும் கணினியில் வேகம் குறைவது, வழக்கத்துக்கு அதிகமான, தொடர்பேயில்லாத Pop up வருவது, ஓர் இணையமுகவரியைத் தட்டினால் தானாகவே வேறு முகவரிக்குப் போவது போன்ற புதிரான நடவடிக்கைகளைக் காணலாம்.

3. Adware என்றால் என்ன ?

இது நம் வீட்டுத் திண்ணையிலே கிடக்கும் பிட்-நோட்டீஸ் மாதிரி. அதாவது தானாகவே விளம்பரங்கள் வந்து குவியும். அதிலும் முக்கியமாக, விளம்பரங்களில் தட்டினால் விற்கப்படும் பொருளுக்கு 50% - 70% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கும். இம்மாதிரி நடந்துகொள்ளும் மென்பொருட்கள் Adware என அழைக்கப்படும். பூட்டிக்கிடக்கும் வீட்டில் பிட்-நோட்டீஸ் குவிந்து கிடப்பது போல, முறையே கணினியைச் சுத்தம் செய்யாவிட்டால், இம்மாதிரி Adwares இன் தாக்கமும் அதிகரிக்கும்.

4. Phishing என்றால் என்ன ?

Fishing என்றால் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, Phising என்றால், தூண்டில் போட்டுத் தகவல்களை உங்களிடமிருந்தே பெறுவது. உண்மையான வர்த்தகத் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலிதளங்கள்தாம் இம்மாதிரி முறைகேடான செயல்களின் அரங்கம்.

உதா: - உண்மையான ICICI வங்கியின் முகப்பு முகவரிhttp://www.icicibank.com/. இதே ICICI வங்கியின் Login தளமுகவரிhttps://infinity.icicibank.co.in என்று துவங்கும். கவனிக்க வேண்டியது முகவரியை மட்டுமன்று, முகவரிக்கு முன்னால் வரும் HTTP - HTTPS என்பதைத்தான். காரணம், திடீரென்று உங்களுக்கு " ICICI Bank" இலிருந்து வந்தது போல் தொற்றுவிக்கும் ஒரு கடிதம் வரும்.
" எங்களது வங்கியில் / தளத்தில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்கிறோம். அதன் காரணமாக உங்கள் பயணர் கணக்கைப் பாதுகாத்துக்கொள்ள கீழே இருக்கும் சுட்டியில் வங்கிக் கணக்கு எண் – கடவுச்சொல் – விலாசம் – credit card number போன்ற தகவல்களைத் தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்."
உண்மையான வங்கியிலிருந்து வந்தது போல் தோன்றும் இந்த அஞ்சலில் இருக்கும் சுட்டியைச் சொடுக்கினால், ICICI வங்கியின் தளத்தைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் தளம் உங்களை வரவேற்க்கும். கூர்ந்து கவனித்தால், தள முகவரியில் HTTPS க்கு பதில் HTTP என்று இருக்கும்.
HTTPS – Hyper Text Transfer Protocol Secure
HTTP – Hyper Text Transfer Protocol

Secure " என்பது இல்லாத தளங்களில் எக்காரணம் கொண்டும் உங்கள் Credit card தகவல்களை அல்லது Banking மற்றும் அந்தரங்கத் தகவல்களை அளிப்பதைத் தவிர்க்கவும். ஒரு முறை உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்கு எண் கைமாறிவிட்டால், என்ன நடக்கும் என்பதை விவரிக்க முடியாது.
இம்மாதிரி வரும் அஞ்சல்களை எக்காரணம் கொண்டும் நம்பி விடாதீர்கள். நேரடியாக தொடர்புடைய அலுவலகம் செல்ல முடியுமென்றால், சிரமம் பார்க்காமல் போய் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தவும். இது முடியாத பட்சத்தில், சம்பந்தபட்ட HTTPS தளத்துக்குச் சென்று, உதவிப் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி எண் அல்லது Instant Messenger ID இருந்தால், நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இதுவும் இல்லையென்றால், Contact Customer support என்பதைச் சொடுக்கி மேற்படி விவரங்கள் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Thursday, 28 November 2013

கணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு.

கணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு.


== கணினி வரலாறு ==

படிமம்:Colossus.jpg

ஆதியில் ''"கணிப்பான்"'' என்பது [[கணிதர்]] ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக [[எண்சட்டம்]] போன்ற பல்வேறு [[பொறிமுறை கணிப்பு சாதனம்|பொறிமுறை கணிப்பு சாதனங்களின்]] உதவியுடன் பணிபுரிந்தார். தொடக்ககால கணிப்பு சாதனத்துக்கு உதாரணமாக கி.மு 87 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் [[அன்டிகைதிரா]] எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம். இந்த நூதனமான சாதனத்தின் அமைவுக்கு காரணமான தொழில்நுட்பம் ஏதொவொரு காலகட்டத்தில் தொலைந்து போனது.


ஐரோப்பாவில் ஏற்பட்ட [[மறுமலர்ச்சி]] காரணமாக [[கணிதம்]], [[பொறியியல்]] துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. 17 ஆம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் [[மணிக்கூடு|மணிக்கூடுகளுக்காக]] அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல [[பொறிமுறை கணிப்பு சாதனம்|பொறிமுறை கணிப்பு சாதனங்கள்]] பின்னடையாக வரத் தொடங்கின, இதன் காரணமாக இலக்கமுறை கணினிகளுக்கு மூலமான தொழில்நுட்பங்கள் பல 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. உதாரணமாக [[துளைப்பட்டை]], [[வெற்றிட கட்டுளம்]] என்பவற்றை குறிப்பிடலாம். முதல் முழுமையான செய்நிரல் கணினியை [[1837]] ஆம் ஆண்டில் [[சார்ல்ஸ் பாபேஜ்]] என்பவர் எண்ணக்கருப்படுத்தி வடிவமைத்தார். ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, நிதி பற்றாக்குறை, மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் பல விஞ்ஞான கணிப்பு தேவைகளுக்கு, கூடிய மடங்கடி கொண்ட விசேடபயன் [[ஒத்திசை கணினி|ஒத்திசை கணினிகள்]] பயன்படுத்தப்பட்டன. பிரசினைகளின் நேரடி பௌதிக அல்லது இலத்திரனியல் மாதிரியுருவை அவை கணிப்புக்களுக்கு பயன்படுத்தின. இத்தகைய கணினிகள் [[இலக்கமுறை]] கணினிகளின் அபிவிருத்திக்கு பின்னர் மிகமிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

[[படிமம்:Colossus.jpg|thumb|இரண்டாம் உலக போரின் போது சேர்மானிய சங்கேத குறிப்புகளை கண்டறிய கொலோசஸ் கணினி பயன்பட்டது.]]

வரவர திறனும், நெகிழ்வுதன்மையும் கூடிய கணிப்பு சாதனங்கள் [[1930]], [[1940]] ஆம் ஆண்டுகளில் பின்னடையாக உருவாக்கப்படலாகின. இவை நவீன கணினிகளின் மேன்மையான [[பண்புக்கூறு|பண்புக்கூறுகளை]] படிப்படியாக சேர்த்துக் கொண்டன, உதாரணமாக [[இலக்கமுறை இலத்திரனியல்]] உபயோகம் ([[கௌவுட் சனொன்]] என்பவரால் [[1937]] ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது), கூடுதல் நெகிழ்வுதன்மை வாய்ந்த செய்நிரலாக்கம். ஒரு குறிப்பிட்ட புள்ளியை இந்தக் காலக்கோட்டில் முதலாவது கணினி என்று வரையறுப்பது மிகவும் கடினமானது. குறிப்பிடதக்க சாதனைகளாக [[கொன்ராட் ஃசுஸ்]] என்பாரின் [[ஃசட் எந்திரம்]], ஆங்கிலேயரின் இரகசிய [[கொலோசஸ் கணினி]], அமெரிக்க [[என்னியாக்]] என்பவை அமைந்தன.

என்னியாக்கின் குறைகளை தெரிந்து கொண்ட அதன் அபிவிருத்தியாளர்கள், அதைவிட நெகிழ்வுதன்மை கூடியதும், இலட்சணமானதுமான வடிவமைப்பை உருவாக்கினார்கள். பின்னாளில் [[செய்நிரல் தேக்க கட்டமைப்பு]] என அறியப்படும் இதிலிருந்தே அனைத்து நவீன கணினிகளும் பெறப்படுகின்றன. இந்த கட்டமைப்பிலிருந்தே கணினிகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் பல [[1940]] ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன, இதில் முதலில் செயற்பட தொடங்கியது [[மான்செஸ்டர்-சிறிய-அளவிடை-பரீட்சார்த்த எந்திரம்]] ஆகும். ஆனால் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய முதலாவது கணினி [[எட்சாக்]] ஆகும்.

கட்டுளத்தால் இயக்கப்பட்ட கணினிகளே [[1950]] ஆம் ஆண்டுகள் முழுவதிலும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் [[1954]] ஆம் ஆண்டு [[திரிதடையம்|திரிதடையங்கள்]] கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக [[1960]] ஆம் ஆண்டுகளில், கட்டுள கணினிகள் செலவு குறைந்த, சிறிய, வேகமான திரிதடையக் கணினிகளால் மாற்றீடு செய்யப்படலாயின. [[ஒருங்கிணைந்த-சுற்றமைப்பு]] தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் [[1970]] ஆம் ஆண்டுகளில் கணினி [[உற்பத்திச் செலவு]] வெகுவாகக் குறைந்து சென்றது, இதனால் தற்போதைய [[தனியாள் கணினி|தனியாள் கணினிகளின்]] முன்தோன்றல்களை வாங்கும் திறன் சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டது.The original IBM Personal Computer (PC)

பதிவு உபயோகமானதாக இருந்தால் கீழே கமெண்ட் போடவும்.  நன்றி

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்


இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும். 

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது. 

நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம் என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள் கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

4) Tamil Peek
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.
5) Tamil tvs.com
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

6)Good Lanka
இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.

7) Tube Kolly
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

8)TamilVix
இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும். 

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD
இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

ஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும், பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டும் ஹாலிவுட் படங்கள் வருவதால் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொண்டு உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹாலிவுட் திரைப்படங்களை விரும்பி பார்ப்போம் ஆனால் அதில் உள்ள ஒரே பிரச்சினை மொழி தான். சாதரணமா நம்ம ஊர் இங்க்லீஸ்ல பேசுனாலே பேசுறவங்க வாயை மொரச்சி பார்ப்போம் இதுல அவனுங்க பேசுற இங்க்லிச எங்க புரிஞ்சிக்கறது.  வசனம் எதுவும் புரியாம வெறும் கதையை வச்சி படம் பார்த்துட்டு வருவோம்.


நம்மளை போன்றவர்களுக்காக வந்தது தான் டப்பிங். ஆங்கில திரைப்படங்களை மொழி பெயர்த்து தமிழில் வெளியிடுவார்கள். ஜாக்கிசான் திடீர்னு "இன்னா நைனா சோக்கா கீற" என்று நாம சென்னை தமிழ்ல பேசுவார். இது பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் வசனங்களை புரிந்து படம் பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும். இது போன்ற தமிழ் டப்பிங் செய்யப்பட படங்களை இணையத்தில் இலவசமாக பார்ப்பதற்கு பல இணைய தளங்கள் உள்ளது. அதில் சிறந்த 10 இணைய தளங்களை உங்களுக்கு இங்கே அறிமுக படுத்துகிறேன்.

இந்த தளத்தில் தமிழில் டப்பிங் செய்யப்பட சிறந்த ஆங்கில படங்கள் உள்ளன. இந்த தளத்தில் மேலும் தமிழ் திரைப்படங்களையும் காணலாம். தமிழ் மொழியில் ஆங்கில படங்களை பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த தளம் முக்கியமானது.

பழைய படங்களில் இருந்து புதிய ஹாலிவுட் படங்கள் வரை நிறைய படங்கள் இந்த தளத்தில் மொழிபெயர்க்க பட்டு உள்ளது. ஹாலிவுட் பட விரும்பிகளுக்கு இந்த தளமும் மிகவும் பயன்படும்.

இந்த தளத்திலும் பழமையான படங்களில் இருந்து புதிய படங்கள் வரை தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

மிகவும் பிரபலமாகாத தளம் ஆனால் நிறைய படங்கள் உள்ளது.


குறைந்த அளவு திரைப்படங்களே இருந்தாலும் சில படங்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 

இந்த தளமும் பயனுள்ள தளம். மிக நல்ல படங்களை வாசகர்களுக்கு பகிர்ந்துள்ளது.

இந்த தளத்தில் குறைந்த அளவு படங்களே காணப்படுகின்றன.


இந்த தளத்தில் ஆங்கில படங்கள் மட்டுமின்றி பிற மொழி படங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அளிக்கப் படுகிறது.

மிகவும் குறைந்த அளவு படங்களே உள்ளது இந்த இணைய தளத்தில் 

10) Tamilmask
இந்த தளத்திலும் பெரும்பாலான ஆங்கில படங்கள் நிரந்து காணப்படுகிறது. இந்த தளமும் வாசகர்களுக்கு ஒரு சிறந்த தளமாகும். 

இந்த தளங்களில் சென்று வாசகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களை இலவசமாக தமிழில் பார்த்து ரசிக்கலாம்.

அனைத்து வகையான Driver-களையும் டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்.                                  அனைத்து வகையான Driver-களையும் டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்.

அனைத்து வகையான Driver-களையும்  டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்.

Driver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு. அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு  .இந்த 10 தளங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverகள்  முற்றிலும் இலவசமாக  கிடைக்கும்.அந்த வரிசையில் கீழே 10 இலவசDriver-களை  டவுன்லோட்  செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.

                         

WEBSITE LINK:


0. Download.com: Device Drivers
Page

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks